சவூதி,
பறவை காய்ச்சல் எதிரொலியாக இந்திய கோழி சம்பந்தமான பொருட்கள் இறக்குமதி செய்ய சவூதி அரேபியா தடை விதித்துள்ளது.
இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பறவை காய்ச்சல் பரவியது. பின்னர் அது கட்டு படுத்தப்பட்டது. பறவை காய்ச்சல் பல நாடுகளில் பரவி வருவதாக உலக விலங்குகள் நல வாரியம் ஜனவரி 2ந்தேதி அறிவிப்பு வெளியிட்டது.
இதைத்தொடர்ந்து தற்காலிகமாக இந்திய கோழி இறைச்சி, கோழி முட்டை மற்றும் அது சம்பந்தமான பொருட்கள் இறக்குமதி செய்ய சவூதி அரேபியா தடை விதித்துள்ளது.
இதுகுறித்து, வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் APEDA), இந்தியா கோழி ஏற்றுமதியாளர்கள், சுற்றுச்சூழல் அமைச்சம் ஆகியவற்றுக்கு இதுகுறித்த தகவல்களை தெரிவித்து உள்ளது.
இதைத்தொடர்ந்து சவூதி அரசு இந்திய கோழிப்பொருட்கள் இறக்குமதி உடனடியாக தடை விதித்துள்ளது.
இந்த தடை குறித்து மூன்று மாதத்தில் மீண்டும் ஆராயப்பட்டு குறிப்பிட்ட கால இடைவெளியில் நீக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து அதிக அளவு கோழி சம்பந்தமான பொருட்களை இறக்குமதி செய்வதில் இரண்டாவது பெரிய நாடு சவுதி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தடை குறித்து, கோத்ரேஜ் நிர்வாக இயக்குனர் பல்ராம்யாதவ் கூறியதாவது,
பறவை காய்ச்சல் காடு, மற்றும் இடம் பெயரும் பறவைகள் மூலம் பரவுகிறது,பறவைக் காய்ச்சல் ஏற்பட சாதகமான நாடு இந்தியா என்றும் இதன் காரணமாக கோழி, கோழி முட்டைகள் போன்ற வற்றை ஏற்றுமதி செய்வதை இந்தியா நிறுத்த வேண்டும்கூறியுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுடில்லியில் பறவை காய்ச்சல் காரணமாக பறவைகள் சரணாலயம் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.