சென்னை:  தமிழக சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினர்களின்  பல்வேறு கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

சாத்தனூர்அணை தொடர்பான கேள்விக்கு, சாத்தனூர் அணையில் வெள்ளம் வராமல் தடுக்க சிறப்புத் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் துரைமுருகன் கூறினார். அதுபோல மதுரை கப்பலூர் டோல் அகற்றுவது தொடர்பாக மத்தியஅரசிடம் பேசி வருவதாகவும் அமைச்சர் வேலு கூறினார்.

தமிழ்நாடு சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று  4-வது நாள் அமர்வு  வழக்கம்போல  தொடங்கியது.  இன்றைய அமர்வில்,  பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று 2-வது நாளாக நடைபெறுகிறது.  முன்னதாக, நேற்று அ.தி.மு.க.வின் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்ததால் சபாநாயகர் அப்பாவு எப்போதும் போல் அவையை வழி நடத்துகிறார்.

இதைத்தொடர்ந்து கேள்வி நேரத்தின்போது, எம்.எல்.ஏக்களின் பல்வேறு கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

பெஞ்சல் புயல் மழையால், தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டது. இதனை தடுக்க தடுப்பணை கட்டப்படுமா? என சட்டமன்ற உறுப்பினர் கு.பிச்சாண்டி கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், சாத்தனூர் அணையில் பெறு வெள்ளம் வந்தால் சமாளிக்க சிறப்பு திட்டம் போடப்பட்டுள்ளது. உறுப்பினர் கோரிக்கை நிரைவேற்றப்படும் என்றார். மேலும் சாத்தனூர் அணையில் வெள்ளம் வராமல் தடுக்க சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. தென்பெண்ணை ஆற்றில் தடுப்பணை கட்டுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் துரைமுருகன் உறுதியளித்தார்.

தொடர்ந்து கீழ்வேளூர் தொகுதியில், வேட்டைக்காரனிருப்பு பகுதியில் குழந்தைகள் மையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? என நாகை மாலி கேள்வி கேட்டார்.

இதற்கு பதில் கூறிய  அமைச்சர் கீதா ஜீவன், “இந்தாண்டு 500 குழந்தைகள் மையங்களுக்கு கட்டிடம் கட்ட முதலமைச்சர் ஸ்டாலின் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். குழந்தை நல மையங்களை சீர்மிகு மையங்களாக மாற்ற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த ஆண்டு, அனுமதி அளிக்கப்பட்ட 1,503 மையங்களில் 1,203 மையங்களுக்கு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது” என்றார்.

சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார்,   விதிமுறைகளை மீறி இயங்கும்  கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு பரிந்துரைக்க வேண்டும் என்று  தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் எ.வ.வேலு, “விதிமுறைகளை மீறி இயங்கும் சுங்கச்சாவடிகளை அகற்ற தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்கிறோம். மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற ஒன்றிய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படும். கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற 2,3 கடிதங்களை ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரிக்கு அனுப்பிவிட்டோம் என தெரிவித்தார்.

கிணத்துக்கடவு உறுப்பினர் தாமோதரன்  தடுப்பணை தோடர்பான கேள்விக்கு பதில் கூறிய  அமைச்சர் துரைமுருகன்,   கிணத்துக்கடவு தொகுதி திருமலையம்பாளையம் பகுதியில் உள்ள தடுப்பணை ரூ.1.69 கோடியில் சீரமைக்கப்படும் என்றார். மேலும், கிணத்துக்கடவு தொகுதிக்கு 3 தடுப்பணை கட்டித் தரப்படும்.  என்றவர், மாநிலத்தில்  வெள்ளத்தடுப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.7 கோடியில் மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

நாகை மாலி கீழ்வேளூர் தொகுதியில், வேட்டைக்காரனிருப்பு பகுதியில் குழந்தைகள் மையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? என  கேள்வி எழுப்பினார்.

.இதற்கு அமைச்சர் கீதா ஜீவன் அளித்துள்ள பதிலில், “இந்தாண்டு 500 குழந்தைகள் மையங்களுக்கு கட்டிடம் கட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். குழந்தை நல மையங்களை சீர்மிகு மையங்களாக மாற்ற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த ஆண்டு, அனுமதி அளிக்கப்பட்ட 1,503 மையங்களில் 1,203 மையங்களுக்கு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது என்றார்.

அதைத்தொடர்ந்து உறுப்பினர் ஒருவர் மாற்றுத்திறனாளி உரிமைத்தொகை குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் கூறிய அமைச்சர் கீதா ஜீவன், மாற்றுத் திறனாளி உரிமைத் தொகை பெற்றாலும், குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உரிமைத் தொகை தரப்படும் என்றார்.

கும்பகோணம் நாகநாத சுவாமி கோவில் கும்பாபிஷேசம் தொடர்பான கேள்விக்கு பதில் கூறிய அமைச்சர் சேகர்பாபு, கும்பகோணம் நாகநாதசுவாமி கோயில் திருப்பணிகள் ரூ.55லட்சம் செலவில் விரைவில் தொடங்கும் என தெரிவித்துள்ளார்.  மேலும்,  1000 ஆண்டு பழமையான கோயில்களை பாதுகாக்க இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.