சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் தனது நிறுவனத்தின் புரொமோஷன் விளம்பரங்களுக்கு யாரையும் எதிர்பார்க்காமல் தானே நடித்து அசத்தினார். அதற்கு வந்த நெகட்டிவ் கமெண்ட்டையும் கண்டுகொள்ளாமல் சினிமாவில் இறங்குவதற்கான சரியான நேரத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார்.
முன்னணி தொழிலதிபராக வெற்றிபெற்ற லெஜண்ட் சரவணன் ஹீரோவாக அறிமுகமாகிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அப்படத்தை இயக்கப் போகும் இயக்குநர் யார்?, ஹீரோயின் யார்? போன்ற தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. அதே சமயம், முன்னணி ஹீரோயின்கள் பலர் லெஜண்ட் சரவணனுடன் ஜோடியாக நடிக்க ரெடியாக இருப்பதோடு, பெரும் தொகையை சம்பளமாக எதிர்ப்பார்க்கவும் செய்கிறார்களாம்.