கொல்கத்தா:

மேற்குவங்கத்தை உலுக்கி எடுத்துவரும்  சாரதா சிட்பண்ட் மோசடியில், மம்தா கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலர் ஈடுபட்டுள்ளது வெளிச்சத்துக்கு வந்த நிலையில், கட்சியின் எம்.பியான சதாப்திராய், தான் பெற்ற ரூ.30.64 லட்சம் பணத்தை அமலாக்கத்துறைக்கு திருப்பி அனுப்பினார்.

கால்பந்து ரசிகர்களான மேற்குவங்க மாநிலத்தைவரை திட்டம்போட்டு கவிழ்த்தது கொல்கத்தா கால்பந்து அணியான மோகன் பகான் அணி. இதன் தலைவர் சுதிப்தோ சென், அரசியல் கட்சி யினர்களுடன் நெருக்கமானவர்.

இந்த அணியினர்தான் சாதார நிதி நிறுவனம் நடத்தி வந்தனர். இந்த நிறுவனத்தின் கிளைகள் மாநிலம் முழுவதும் விரிந்து சங்கிலித் தொடர்களாக இருந்தது வந்தது. சுமார் 16 ஆயிரம்  ஊழியர்கள் இங்கு பணிபுரிந்தனர்.

இவர்களை நம்பி, அங்கு ஏராளமான ஏழை மற்றும் நடுத்த வர்க்கத்தினர் பணம் போட்டனர். ஆனால், நிதி நிறுவனத்தை திடீரென கடந்த 2013ம் ஆண்டு மூடி மக்களின் வயிற்றில் இடியை இறக்கியது சாரதா சிட்பண்ட் நிதி நிறுவனம்.

இந்த நிதி நிறுவனம் மக்களிடம் இருந்து ரூ.30ஆயிரம் கோடி வரை நிதி திரட்டிய நிலையில், திடீரென மூடியது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த முறைகேட்டுக்கு மேற்கு வங்கத்தின் முக்கிய அரசியல் புள்ளிகளின் ஆதரவு இருந்தது. திரிணாமுல் கட்சியைச் சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள் இந்த நிறுவனத்தால் லாபம் அடைந்ததாகச் குற்றம் சாட்டப்பட்டு எழுப்பப்பட்டது.

இந்த நிதி முறைகேடு தொடர்பாக, மாநில அரசு கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் தலைமையிலான சிறப்பு குழு அமைத்து விசாரணை நடத்தியது. ஆனால், விசாரணை சரியான முறையில் நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சி.பி.ஐ. விசாரிக்க உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது.

கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரை கைது செய்ய சிபிஐ காவல்துறையினரை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மாநிலத்திற்கு நுழைய கடும் எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டார்.

இந்த முறைகேட்டில் சம்பந்தப்பட்ட  திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைத் சேர்ந்த மூத்த தலைவர் முகுல்ராய், பாஜகவில் இணைந்து தன்னை காப்பாற்றிக்கொண்டுள்ளார். அதுபோல மற்றொரு எம்.பியான  சதாப்தி ராய் மீதும் குற்றச்சாட்டு எழுந்தது. அவரிடம் பலமுறை விசாரணை நடைபெற்ற நிலையில், தான் முறைகேடாக பெற்ற பணத்தை திருப்பி தருவதாக அமலாக்கத் துறைக்குக்கு ஜூலை 31ந்தேதி கடிதம் எழுதியிருந்தார்.

அதன்படி, சாரதா குழும நிறுவனங்களின் பிராண்ட் தூதராக தனக்கு கிடைத்த ரூ .30.64 லட்சத்தை கொல்கத்தாவில் உள்ள அமலாக்க இயக்கு நரகத்திற்கு நேற்று டிடி எடுத்து அனுப்பினார்.

அவரது டிடி கிடைக்கப்பெற்றதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில்,  குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக  காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மனைவி நளினி வழக்கறிஞராக ஆஜரானார். இதற்காக அவருக்கு கட்டணம் ரூ. 1.35 கோடி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாகவும்  புகார் எழுந்துள்ளது. இது குறித்து அமலாக்கத்துறை நளினி சிதம்பரம் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.T