மோகன்லால் இயக்கவுள்ள ‘பரோஸ்’ படத்தின் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இயக்குநர் ஜிஜோ ஆங்கிலத்தில் எழுதியுள்ள ‘பரோஸ் –கார்டியன் ஆஃப் டி-காமாஸ் ட்ரெஷர்’ என்னும் போர்த்துக்கீசியர்கள் குறித்த கதையைத் தான் மோகன்லால் இயக்கவுள்ளார்.

இந்தக் கதையில் ஸ்பெனீஷ் நடிகர்களுடன் இணைந்து, பரோஸ் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிக்கவுள்ளார். இதில் பிருத்விராஜ் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். முழுக்க 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் ஒப்பந்தமாகியுள்ளார்.

ஸ்ரீகர் பிரசாத் எடிட் செய்யும் இந்தப் படத்தை, மோகன்லாலின் ஆஸ்தான படநிறுவனமான ஆசீர்வாத் சினிமாஸ் சார்பில் ஆண்டனி பெரும்பாவூர் இந்த ஃபேன்டஸி திரைப்படத்தை தயாரிக்கிறார்.

இந்நிலையில் படப்பிடிப்புதளத்தில் மோகன்லாலுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் சந்தோஷ் சிவன்.