
சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் பிரபுதேவா நாயகனாக நடிக்கவுள்ளார்.
கொரோனா ஊரடங்கு சமயத்தில் முழுமையாக கமர்ஷியல் கதை ஒன்றை சந்தோஷ் பி.ஜெயக்குமார் எழுதி முடித்துள்ளார். தற்போது அதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளார். இதனை மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
இந்தப் படத்தின் நாயகனாக பிரபுதேவா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
[youtube-feed feed=1]