
இந்தியாவிற்கு 12 சர்வதேசப் பதக்கங்களையும், தன் சொந்த மாநிலமான தமிழகத்திற்கு 50 பதக்கங்களுக்கு மேல் வென்று கொடுத்தவர் தடகள வீராங்கனை சாந்தி செளந்தரராஜன். இவர் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் தமிழ்ப் பெண் ஆவார்.
அவர் வாழ்க்கையில் நடந்த, இதுவரை வெளிவராத பல சுவாரஸ்யமான சம்பவங்கள் மற்றும் திருப்பங்களுடன் படமொன்று தயாராகிறது.
ஜெயசீலன் தவப்புதல்வி இயக்கவுள்ள இந்தப் படம் தொடர்பான அறிவிப்பை ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் மஞ்சு வாரியர் இருவரும் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டனர்.
888 புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக ஜிப்ரான், ஒலி வடிவமைப்பாளராக ரசூல் பூக்குட்டி, பாடலாசிரியராக யுகபாரதி, வசன கர்த்தாவாக பொன்.பார்த்திபன், ஒளிப்பதிவாளராக கோபிநாத் டி.தேவ் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.
சாந்தி செளந்தரராஜனாக யார் நடிக்கவுள்ளார் என்பது குறித்த அறிவிப்பு தமிழ்ப் புத்தாண்டு அன்று வெளியிடப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
[youtube-feed feed=1]Presenting the First look of #SanthiSoundarajan #TheSunlightWoman #RollingToday #RajeevGopinath#AnoopShoban@888production1 @DirJayaseelan @Gopinathd06 @thamizh_editor @GhibranOfficial @resulp @yugabhaarathi @KaliPremkumar @Ponparthiban @onlynikil pic.twitter.com/kut8akoaL8
— aishwarya rajesh (@aishu_dil) March 15, 2021