சென்னை: சமஸ்கிருதத்தை வேறறுப்போம் என்ற கூறி  வந்த திமுக அரசு, தற்போது தொல்லியல் துறை பணிக்கு சமஸ்கிருதம் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என அறிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்காமல் மவுனம் காத்து வருவதும் விந்தையாக உள்ளது.

ஏற்கனவே சனாதனம் குறித்து பேசிய  அமைச்சர் உதயநிதி கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித் தான் இந்த சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம். சனாதனம் என்றால் என்ன? சனாதனம் என்கிற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்ததுதான். சனாதனம் சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது என பேசியிருந்தார். அதுபோல திமுகவினரும், திராவிட கழகத்தினரும் சமஸ்கிருதத்துக்கு எதிராக பேசி வருகின்றனர்.

இந்த நிலையில்,  தொல்லியல் துறை உதவி காப்பாட்சியர் பணிக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதில், சமஸ்கிருத பட்டப் படிப்புடன் திராவிட மொழிகள் மற்றும் பண்டைய இந்திய வரலாறு பற்றிய கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் அல்லது தொல்லியல் பட்டப்படிப்பு (சமஸ்கிருத பணி அறிவுடன் சமஸ்கிருதத்தில் உயர் தகுதி) திராவிட மொழிகள் மற்றும் எழுத்துக்கள் மற்றும் பண்டைய இந்திய வரலாறு பற்றிய அறிவு பெற்றிருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது சர்ச்சையை ஏற்படுத்திஉள்ளது.

தொல்லியல் பணிக்கு சமஸ்கிருதம் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளதாகக் கூறி, பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உள்படப லர்  கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையுல்,  தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டுள்ள ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தோ்வுக்கான அறிவிக்கையில் உதவி காப்பாட்சியா் (தொல்லியல்) பணிக்கு சம்ஸ்கிருத பட்டப்படிப்புடன் திராவிட மொழிகள் மற்றும் பண்டைய இந்திய வரலாறு பற்றிய அறிவு கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.

புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தின் உதவி காப்பாட்சியா் பணிக்கு சம்ஸ்கிருத பட்டப்படிப்புடன் திராவிட மொழிகள் பற்றிய அறிவு பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தொல்லியல் பணிகளை மேற்கொள்வதற்கு சம்ஸ்கிருதப் பட்டமும், சம்ஸ்கிருத மொழி அறிவும் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டிருப்பது அப்பட்டமான சம்ஸ்கிருதத் திணிப்பு. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

சம்ஸகிருதம் படித்தவா்களை தொல்லியல் துறையில் திணிப்பதற்காகவே இத்தகைய புதிய கல்வித் தகுதிகளை தமிழக அரசு திணிக்கிறதோ என்ற ஐயம் எழுகிறது. எனவே, டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட ஆள்தோ்வு அறிவிக்கையை உடனடியாக திரும்பப் பெற்று, சம்ஸ்கிருதம் கட்டாயத் தகுதி என்ற பகுதியை நீக்கிவிட்டு, தொல்லியல் மற்றும் செம்மொழித் தமிழை கட்டாயத் தகுதியாக அறிவித்து புதிய அறிவிக்கையை வெளியிட தமிழக அரசு ஆணையிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், , “டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள தொல்லியல்துறை தொழில்நுட்பப் பணியாளர் தேர்வுக்கான புதிய அறிவிக்கையில் சமஸ்கிருதம் தெரிந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. சமஸ்கிருதம் தெரிந்திருப்பதுதான் தமிழ்நாட்டின் தொல்லியலை அறிய ஒரே தகுதியா? தமிழ்நாடு தொல்லியல் துறைக்கும் சமஸ்கிருதத்திற்கும் என்ன தொடர்பு இருக்கிறது?” என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளார்.

டிஎன்பிஎஸ்சியின் இந்த அறிவிக்கை யாருடைய உத்தரவின் பேரில் வெளியிடப்பட்டது? முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்புதலின் பேரில்தான் வெளியிடப்பட்டுள்ளதா என்ற அவர், “அப்படியென்றால் அமைச்சர் ரகுபதி கூறியதுபோல் உண்மையிலேயே ராமரின் ஆட்சியின் நீட்சிதான் திமுக ஆட்சியா? திராவிட மாடல் என்பது உண்மையிலேயே சமூகநீதியா? அல்லது மனுநீதியா?” என்றும் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து, “தொல்லியல் பணிக்கு திராவிட மொழி தெரிந்திருக்க வேண்டுமென்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அப்படி ஒரு மொழி இருக்கிறதா? தமிழ் மொழி என்று குறிப்பிடுவதில் தமிழக அரசிற்கு என்ன தயக்கம்? என்ன தடை? திராவிட மொழி என்றால் அது எந்த மொழி என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலில் விளக்க வேண்டும்” என்றார்.

மேலும், “அரசுப் பணிகளிலிருந்து தமிழை அகற்ற திமுக அரசு முனைவது கொடுமையாகும். எங்கும் தமிழ்,எதிலும் தமிழ், வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்பதெல்லாம் தமிழர்களை ஏமாற்றும் வெற்று முழக்கங்கள் என்பது இதன்மூலம் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு புது எக்ஸ்பிரஸ்வே… 6 மாநிலங்கள், 1500 கி.மீ தூரம், ரூ.45000 கோடி… இதுதான் நம்பர் 2 சாலை!
ஆகவே, தமிழ்நாடு தொல்லியல் துறை பணிக்கு சமஸ்கிருதம் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்ற அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெற்று, தமிழில் புலமை பெற்றிருக்க வேண்டும் என்கிற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.