டில்லி: நாடாளுமன்றத்தில் சிறப்பாக செயல்பட்ட திமுக எம்.பி. உள்பட 17 எம்.பி.க்களுக்கு ‘சன்சத் ரத்னா’ விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, பாஜக, திமுக உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்களுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தவிருது பட்டியலில் திருவண்ணாமலை தொகுதி திமுக எம்.பி. அண்ணாதுரை இடம்பெற்றுள்ளார்.
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் (NCBC) தலைவர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர் தலைமையிலான குழுவினர், நடப்பாண்டில் நாடாளுமன்றத்தில் சிறப்பாக செயல்பட்டோருக்கான, விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்தனர்.. பிரைம் பாயிண்ட் அறக்கட்டளை மற்றும் இ-பத்திரிகை பிரீசென்ஸ் ஆகியவற்றால் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
ஜூலை மாதத்தின் கடைசி வாரத்தில் டெல்லியில் நடைபெறும் 15வது சன்சத் ரத்னா விருது வழங்கும் விழாவின் போது இந்த விருதுகள் வழங்கப்படும்.
பார்லிமென்டில் சிறப்பாக செயல்பட்டதற்காக 17 எம்.பி.,க்களுக்கு 2025ம் ஆண்டுக்கான ‘சன்சத் ரத்னா’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி., சுப்ரியா சுலே, ஜார்க்கண்ட் பாஜ எம்.பி., நிஷிகாந்த் துபே, உத்தவ் தாக்ரேவின் சிவசேனா கட்சியைச் சேர்ந்த அரவிந்த் சாவந்த், திமுகவைச் சேர்ந்த அண்ணாதுரை ஆகியோருக்கு இந்த வழங்கப்படுகிறது.
அதேபோல, 3 பார்லிமென்ட் கூட்டங்களிலும் சிறப்பான பங்களிப்பை கொடுத்த நான்கு சிறப்பு நடுவர் விருதுகளும் வழங்கப்படுகின்றன. ஒடிசா பாஜ எம்.பி., பர்த்ருஹரி மகதாப், கேரள எம்.பி., என்.கே. பிரேமச்சந்திரன், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா சுலே மற்றும் சிவசேனா கட்சி எம்.பி., ஸ்ரீரங் அப்பா சந்து பார்னே ஆகியோருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் 16வது (2014-2019) லோக் சபாவிலிருந்து தொடர்ந்து சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர்.
விருதுகளை பெறும் எம்.பி.,க்கள் விவரம் வருமாறு:-
1. சுப்ரியா சுலே (தேசியவாத காங்கிரஸ் – சரத்பவார் பிரிவு)
2024ஆம் ஆண்டு வரை 125 பேருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. முதல் விருது வழங்கும் விழாவை சென்னையில் அப்துல் கலாம் நடத்தி வைத்தார். முதல் விருதை ஹன்ஸ்ராஜ் அஹிர் பெற்றார். 11 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பி ஒருவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.