புதுடெல்லி: உலகப் புகழ்பெற்ற வணிக இதழான ‘ஃபார்ச்சூன்’ இந்திய வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியுள்ளது ஆர்.பி.சஞ்சீவ் கோயங்கா குழுமம்.
ஃபார்ச்சூன் இதழின் இந்தியப் பதிப்பு கடந்த 2010ம் ஆண்டிலிருந்து வெளிவருகிறது. ஆர்.பி.சஞ்சீவ் கோயங்கா தொழில் குழுமத்தின் மதிப்பு ரூ.30 ஆயிரத்து 200 கோடி ஆகும்.
இதுதொடர்பாக, ஃபார்ச்சூன் மீடியா குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி ஆலன் முரே கூறியதாவது, “இந்தியா எங்களுக்கு மிக முக்கியமான சந்தையாகும். தற்போது, சஞ்சீவ் கோயங்கா குழுமத்தின் கீழ், ‘பார்ச்சூன்இந்தியா’ மேலும் பல உயரங்களை தொடும்” என்றார்.
பார்ச்சூன் இந்தியா இதழ், ‘ஃபார்ச்சூன் இந்தியா 500, ஃபார்ச்சூன் இந்தியா நெக்ஸ்ட் 500, சக்தி வாய்ந்த பெண்கள்’ என்று பல பட்டியல்களை வெளியிட்டு வருகிறது. ஃபார்ச்சூன் நிறுவனம் கடந்த 1929ம் ஆண்டில் நிறுவப்பட்டு, அதன் முதல் வெளியீடு 1930ல் வெளியானது.