சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘கங்குபாய் கதியாவாதி’. இப்படத்தில் ஆலியா பட் பிரதான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தற்போது ‘கங்குபாய் கதியாவாதி’ படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, படக்குழுவினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சஞ்சய் லீலா பன்சாலி தனது அலுவலகத்திலேயே தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.