மும்பை

காராஷ்டிர மாநிலத்தின் புதிய டிஜிபி ஆக சஞ்சய் குமார் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

வரும் 20 ஆம் தேதி அன்று மகாராஷ்டிராவில் ஒரே கட்டமாக நடைபெறும் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஒரு கூட்டணியாகவும், காங்கிரஸ், உத்தவ் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) ஒரு அணியாகவும் போட்டியிடுகின்றன

மலாராஷ்டிர மநில சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் புகார்களைத் தொடர்ந்து அம்மாநில டி.ஜி.பி ரஷ்மிசு க்லாவை உடனடியாக இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் அம்மாநில அரசுக்கு நேற்று உத்தரவிட்டிருந்தது.

மராட்டிய மாநிலத்தின் புதிய டி.ஜி.பி.யாக சஞ்சய் குமார் வர்மா நியமிக்க தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இன்று மாலை 5 மணிக்குள் அவர் டி.ஜி.பி.யாக பொறுப்பேற்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. 1990 ஆம் ஆண்டு ஐபிஎஸ் பேட்டை சேர்ந்த சஞ்சய் குமார் வர்மா சட்டம் மற்றும் தொழில்நுட்பத்துறையின் டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்தவராவார்.