
கடந்த 9-ம் தேதி நடிகர் சஞ்சய் தத்துக்கு கடும் மூச்சுத் திணறல் மற்றும் லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த ஆக்ஸ்ட் 11 ஆம் தேதி திடீரென்று மருத்துவக் காரணங்களுக்காகத் திரையுலகிலிருந்து சில காலம் விலகுவதாக சஞ்சய் தத் அறிவித்தார். அடுத்த சில மணி நேரங்களில் சஞ்சய் தத்துக்கு 3-ம் கட்ட நுரையீரல் புற்றுநோய் என்றும், இதன் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்குச் செல்லவுள்ளதாகவும் தகவல் வெளியானது. பின்னர் புற்றுநோய் சிகிச்சைக்காக மும்பை கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் நடிகர் சஞ்சய் தத்தின் புதிய புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. இதில் அவரது தோற்றத்தைப் பார்த்த ரசிகர்கள் அவரது ஆரோக்கியம் குறித்துக் கவலை கொண்டுள்ளனர்.
Patrikai.com official YouTube Channel