மும்பை:

பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் உடல் நலக்குறைவால் மும்பையில் உள்ள பிரபல நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து மும்பை நானாவதி மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டதாவது: “ சஞ்சய் தத்திற்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதையடுத்து, அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனா பரிசோதனை சஞ்செய் தத்திற்கு மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவுகள் நெகட்டிவ் என்றே வந்துள்ளன. எனினும், மருத்துவ கண்காணிப்பில் சில நாட்கள் இருப்பார் என்றும் அவரது உடல் நிலை தற்போது நல்ல நிலையில் உள்ளது “ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]