விஜய் நடித்த துப்பாக்கி படத்தில் அவருக்கு தங்கையாக நடித்தவர், சஞ்சனா சாரதி.

இதன் பின்னர் “என்னை நோக்கி பாயும் தோட்டா” படத்தில் நடித்தார். இப்போது அவர் ரிதுன் என்ற அறிமுக டைரக்டரின் “நினைவோ ஒரு பறவை” படத்தில் நடித்து வருகிறார்.

இது ஒரு காதல் கதையாகும் சஞ்சனாவுக்கு ஜோடியாக ஹரி பாஸ்கர் நடிக்கிறார்.

அவர் முதன் முறையாக தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். அவருக்கு ஜோடியாக நவீன் சந்திரா நடிக்கிறார்.

“10 ஆண்டுகளுக்கு முன்பே நடிக்க ஆரம்பித்தாலும், அதிக படங்களில் நடிக்க வில்லையே. ஏன்?” என கேட்டபோது “எல்லாம் தங்கை வேடங்களாக வந்ததால் நடிக்க வில்லை. இப்போது தான் எனக்கு பொருத்தமான வேடங்கள் வருகின்றன. மீண்டும் நிறைய படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளேன்” என்கிறார், சஞ்சனா.

– பா. பாரதி