சென்னை: திமுக அரசின் தனியார் மயத்தை எதிர்த்து போராடி வரும் தூய்மை பணியாளர்கள்,  சென்னை மாநகராட்சி ஆணையர் வீட்டை இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய நிலையில், அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

துப்புரவு பணியை தனியாருக்கு தாரை வார்த்தை கண்டித்து, கடந்த 3 மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வரும் தூய்மை பணியாளர்கள் தங்களது போராட்டங்களை தீவிரப்படுத்தி உள்ளனர்.  ன்னை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மாநகராட்சி தூய்மைப் பணிகளை தனியாா் மயமாக்குவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்வேறு கட்ட தொடா் போராட்டங்களில் தூய்மைப் பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

ஏற்கனவே தலைமைச்செயலகம்,  ரிப்பன் மாளிகை, எழிலகம் முற்றுகை போராட்டம் நடத்தியதுடன், கடற்கரை கருணாநிதி நினைவிடம்,  அண்ணா அறிவாலயம் உள்பட பல இடங்களில் திடீர் திடீர் என்று போராட்டம் நடத்தி வருவதும், அவர்களை காவல்துறையினர் கைது செய்வதும் தொடர்கதையாகிறது.

இந்த நிலையில், இன்று  தூய்மைப்பணியாளர்கள் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர், போராட்டம் நடததிய தூய்மைப் பணியாளர்களை  கைது செய்தனர்.  இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தனியார்மயத்தை எதிர்த்து குரல்கொடுத்த திமுக, ஆட்சிக்கு வந்ததும், அரசு பணிகளை தனியாருக்கு தாரை வார்த்து மக்களை ஏமாற்றி வருகிறது என்று குற்றம் சாட்டினர்.

[youtube-feed feed=1]