டெல்லி: மேற்கு வங்க மாநிலத்தில் ஜனாதிபதியை ஆட்சியை அமல்படுத்த தேசிய பட்டியலின ஆணையம் சார்பில் ஜனாதிபதி திரெளபதி முர்முவிடம் மேற்கு வங்க மாநிலத்தில் ஜனாதிபதியை ஆட்சியை அமல்படுத்த பரிந்துரை செய்து  அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

மம்தா பானர்ஜி ஆட்சி செய்து வரும் மேற்குவங்க மாநிலத்தில், ஊழல் புரையோடியுள்ளது. ஏற்கனவே அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் கூறப்பட்டுள்ளன. சமீபத்தில் ரேசன் பொருட்கள் ஊழல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும்,  அங்கு மம்தா கட்சியினரால் மற்ற கட்சிக்காரர்கள் கடுமையாக தாக்கப்படும் அவலங்களும் அரங்கேறி வருகின்றன. ஒவ்வொரு தேர்தல் சமயத்திலும் அங்கு அராஜம் அரங்கேறுகிறது. இதை தடுக்க வேண்டிய திரிணாமுல் காங்கிரஸ் அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. இது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

 ஏற்கனவே மக்களின் பணத்தை கொள்ளையடித்த சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில், மம்தாவின் உறவினர் உள்பட முக்கிய பிரமுகர்கள் இடம்பெற்றுள்ள நிலையில், அவர்கள் விசாரணைக்குகூட ஆஜராகாமல் இழுத்தடித்து வருகின்றனர்.  இதற்கிடையில்,  மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காலியில்  ரேஷன் ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக டிஎம்சி தலைவர் ஷாஜஹான் ஷேக்கை உடனடியாக கைது செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ரேஷன் ஊழல் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகாமல்,  தலைமறைவான திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஷாஜஹான் ஷேக்குக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் வன்முறைக்களமாக மாறியது. மேலும்,  ஏற்கனவே ஜனவரி 5 அன்று, சந்தேஷ்காலியில் உள்ள டிஎம்சி தலைவரின் இல்லத்திற்குள் நுழைய முயன்ற போது, ​​ED அதிகாரிகள் குழு ஒரு கும்பலால் தாக்கப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த பரபரப்பான சூழலில்,  திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் ஷாஜகான் ஷேக்மீது ஏராளமான பெண்கள் பாலியல் புகார் தெரிவித்து உள்ளனர். பழங்குடியினர் மற்றும் ஏழை பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக ஏராளமான புகார்கள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில், சந்தேஷ்காலி வன்முறை தொடர்பாக தேசிய பட்டியலின ஆணையம்  பாதிக்கப்பட்ட  பெண்களிடம் விசாரணை நடத்தியது.  இதையடுத்து,  மேற்கு வங்க மாநிலத்தில், திரிணாமுல் ஆட்சியை அகற்றிவிட்டு, குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த  பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஷேக் ஷாஜகானின் குண்டர்களால் குறிவைக்கப்படும் மாநிலப் பெண்களின், குறிப்பாக இந்துப் பெண்களின் கண்ணியத்தை நிலைநிறுத்த மாநில முதல்வர் அக்கறை காட்டுவதில்லை. . கற்பழிப்பவர், பலாத்காரம் செய்பவர், கற்பழிப்பவர்களால் நடத்தப்படும் அரசு இருக்கும் மாநிலமாக மேற்கு வங்கம் மாறிவிட்டது சந்தேஷ்காலி சம்பவத்திற்கு பதிலளித்த மறுத்து  “மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மௌனப் பார்வையாளராகச் செயல்படுகிறார் என விமர்சனங்கள் எழுந்த நிலையில்ல், தற்போது, மாநில அரசை கலைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூறிய தேசிய பட்டியலின ஆணைய தலைவர் அருண் ஹல்டர், பெண்கள் மீதான சித்திரவதை மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளால் கொதிப்பில் இருக்கும் சந்தேஷ்காலி குடியிருப்பாளர்களை சந்தித்ததாகவும், அதுதொடர்பான அறிக்கை குடியரசு தலைவரிடம் சமர்ப்பித்துள்ளதாகவும், மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தி வன்முறையை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

சந்தேஷ்காலி  தாக்குதலை “கூட்டாட்சி அமைப்பின் மீதான நேரடித் தாக்குதல்” என்று பாஜக கூறியுள்ள நிலையில், காங்கிரஸ் குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கோரியது. காட்டுமிராண்டித்தனத்தை அடக்குவது மாநில அரசின் கடமை என்று கூறிய ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ், மேற்கு வங்கம் “வாழைக் குடியரசு” அல்ல என்று வலியுறுத்தினார்.

சந்தேஷ்காலி டிஎம்சி பிரிவின் தலைவரான ஷாஜகான் ஷேக் கடந்த ஆண்டு ஜில்லா பரிஷத் பதவியைப் பெற்றபோது அவரது அரசியல் பாதை உச்சத்தை எட்டியது. இதன் காரணமாக,  மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.