டெல்லி: நீட் தேர்வு முடிவு குளறுபடி தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்,  நீட் தேர்வின் புனிதத் தன்மை கேள்விக்குறியாகி உள்ளது என்று கூறிய நிலையில், நீட் கலந்தாய்வுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்ததுடன், இதுதொடர்பாக தேசிய தேர்வு முகமை பதில் அளிக்க உத்தரவிட்டு உள்ளது.

நீட் தேர்வில் குளறுபடி நடந்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது இன்று விசாரணை நடைபெற்றது.  விசாரணையின்போது,  நீட் தேர்வை எழுதிய 24 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, கலந்தாய்வை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரப்பட்டது.

ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், , இதுபோன்ற சம்பவங்கள், முறைகேடுகள்,  நீட் தேர்வின் புனிதத் தன்மை கேள்விக்குறி உள்ளாகி உள்ளது என்று கூறியதுடன்,  இதன் காரணமாக,  இளநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வுக்குத் தடை விதிக்க முடியாது என்று கூறியதுடன்,   இதுகுறித்து தேசியத் தேர்வுகள் முகமை பதில் அளிக்க, உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

மேலும், வழக்கை விரிவாக விசாரிக்க வேண்டும் என்றும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது  இதுதொடர்பான அனைத்து வழக்குகளும் ஜூலை 8ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய உச்சநீதிமன்ற , வழக்கறிஞர் ஜே. சாய் தீபக், ” நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக பல மனுக்கள் நீதிமன்றத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. சில மனுக்கள் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பு தாக்கல் செய்யப்பட்டன.  இந்த வழக்கில்,   சுமார் 70 முதல் 80 மதிப்பெண்கள் பெற்றிருப்பதை தெளிவாகக் காட்டும் 20,000 மாணவர்களிடம் கையெழுத்துப் பெற்ற அலக் பாண்டேவை நாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தினோம் என்றவர்,  குறைந்தபட்சம் 1,500 மாணவர்களுக்கு தன்னிச்சையாக கருணை மதிப்பெண் வழங்கியது எப்படி என்பது குறித்து கேள்வி எழுப்பியதாகவும்,  அதுகுறித்து விசாரிக்க  நீதிபதிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.