தமிழ் தெலுங்கு கன்னடம் என பல மொழிகளில் தன் திறமையை காட்டி வருபவர் சனாகான். பின்பு சில இந்திப் படங்களில் நடிக்கும்போது, அவருக்கும் நடன இயக்குநர் மெல்வின் லூயிஸுக்கும் காதல் ஏற்பட்டது.
தங்களுடைய காதலை இருவரும் ஏப்ரல் 26, 2019-ல் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதிப்படுத்தினார்கள்.
இந்நிலையில் தற்போது தனக்கும் மெல்வின் லூயிஸுக்கும் இடையே ஆன காதல் முறிந்துவிட்டதாக சனாகான் அறிவித்துள்ளார். மேலும், மெல்வின் ஒரு ஏமாற்றுக்காரர் என்றும் தற்போது லூயிஸ் வேறொரு பெண்ணுடன் நட்பில் இருப்பதாகவும் சனாகான் கூறியுள்ளார்.
இதற்கிடையே சனாகான் – மெல்வின் லூயிஸ் இருவருமே தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து, இருவரும் இணைந்திருக்கும் புகைப்படங்களை நீக்கியுள்ளனர்.