சியோல்:
ர்வேதச அளவில் ஸ்மார்ட்போன், தொலைக்காட்சிகளுக்கு முன்னணி நிறுவனமாக சாம்சங் நிறுவனத்தை உருவாக்கிய அதன் நிறுவனர் லீ குன் ஹீ இன்று காலை காலமானார். அவருக்கு வயது 78. எனினும் லீ குன் ஹீவின் இறப்புக்கான காரணத்தை சாம்சங் குழுமம் விளக்கவில்லை

தென் கொரியாவில் தோன்றி, உலகம் முழுவதும் பல்வேறு கிளைகளுடன் புகழ் பெற்று விளங்கும் சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ இன்று காலமானதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

லீ குன் ஹீவின் தலைமையின் கீழ், சாம்சங் உலகின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன்கள் மற்றும் தொலைக்காட்சிகள், பிரிட்ஜ், வாஷிங்மெஷின் உள்ளிட்ட பல்வேறு வீட்டு உபயோக பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனமாக உயர்ந்தது, இன்று நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் தென் கொரியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஐந்தில் ஒரு பங்கிற்கு சமமாகும்.


 

உலக அளவில் சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள், தொலைக்காட்சிகள், எலக்ரானிக்ஸ் பொருள்களுக்கு மிகப் பெரிய வர்த்தகம் இன்றும் உள்ளது. தந்தையின் இறப்புக்குப் பிறகு 1987-ம் ஆண்டு லீ குன் ஹீ அதன் பொறுப்பை ஏற்றார். இவரது தலைமைக்கு பின்னர் சாம்சங் தொழில்நுட்ப உலகில் தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்தது,
1990-களில் சாம்சங் நிறுவனம் உருவாக்கிய மெமரி சிப் உருவாக் ஜப்பான், அமெரிக்க உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் விற்பனை சக்கைபோடு போட்டது. 2000-களில் செல்போன் உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக வளர தொடங்கியது. 1987-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டுவரை சாம்சங் குழுமத்தின் தலைவராக இருந்தார். 1998 முதல் 2008-ம் ஆண்டுவரை சாம்சங் எலக்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்துள்ளார் லீ குன் ஹீ.

தென்கொரியாவில் வணிகத்தில் ஆதிக்கம் செலுத்தும் குடும்ப கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களில் சாம்சங் மிகப் பெரியது. யுத்தத்தால் ஏற்பட்ட பேரழிவில் இருந்து உலகின் 12 வது மிகப் பெரிய பொருளாதாரத்திற்கு தென்கொரியாவை உயர்த்தியதில் சாம்சங் முக்கிய பங்கு வகிக்கிறது. திரைமறைவு அரசியல் உறவுகள் மற்றும் போட்டியாளர்களை வளரவிடாமல் தடுத்து நிறுத்தியதாக குற்றச்சாட்டுகள் சாம்சங் நிறுவனர் லீ மீது உள்ளது. 1996-ம் ஆண்டு தென்கொரியா நாட்டின் அதிபருக்கு லஞ்சம் கொடுத்தார் என்று குற்றம் உறுதி செய்யப்பட்டது. பின்னர், அந்த குற்றச்சாட்டில் அவர் மன்னிக்க பட்டார். அவர் மீதான வரி ஏய்ப்பு குற்றமும் உறுதிசெய்யப்படடது,

ஒரு தனித்துவமான வாழ்க்கை முறைக்கு அறியப்பட்ட லீ குன் ஹீ, 2014 இல் மாரடைப்பால் படுக்கையில் கிடந்தார். அவரது உடல்நிலை குறித்து சிறிதளவே தெரியவந்தது, அவரது இறுதி நாட்களில் கூட மர்மமே நீடித்தது. இந்நிலையில் சாம்சங் நிறுவனம், லீ குன் ஹீ இன்று காலை உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் லீ குன் ஹீ காலமானார் என்பதை மிகவும் வருத்ததுடன் தெரிவிக்கிறோம். தலைவர் லீ ஒரு உண்மையான தொலைநோக்கு பார்வையாளர், சாம்சங்கை ஒரு உள்ளூர் வணிகத்திலிருந்து உலக முன்னணி கண்டுபிடிப்பாளராகவும், தொழில்துறை சக்தியாகவும் மாற்றினார். அவருடைய மரபுகள் எப்போதும் இருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.