கொரியாவின் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹான் ஜாங்-ஹீ (63), மாரடைப்பால் காலமானதாக அந்த நிறுவனம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது ஹீ இறந்துவிட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான சாம்சங் நிறுவனத்தில் 1988ம் ஆண்டு சேர்ந்த ஹான் ஜாங்-ஹீ தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை தொலைக்காட்சி தொடர்பான பிரிவில் கழித்தார்.
தொலைக்காட்சி உற்பத்தித்திறனில் உலகின் பிற நிறுவனங்களை விட சாம்சங் முன்னணியில் இருப்பதற்கு இவரது பங்கு அளப்பரியது. அவர் 2022 ஆம் ஆண்டில் இணை மற்றும் துணைத் தலைவராகவும் பின்னர் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டார் என்று நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தொலைக்காட்சிகள் மற்றும் மொபைல் போன்கள் போன்ற சாம்சங் மின்னணு தயாரிப்புகளை மேற்பார்வையிடும் பொறுப்பை அவர் வகித்துவந்தது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]