லக்னோ:

உ.பி. மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை சமாஜ்வாதி கட்சி அறிவித்து உள்ளது.  முதல்கட்டமாக கட்சி தலைவர் முலாயம் சிங் உள்பட 6 வேட்பாளர் களின் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில், உ.பி.யில்  பாஜக, காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளுக்கு எதிராக,  அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியும், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

இந்த நிலையில், உத்தரப்பிரதேசத்தில் உள்ள 6 தொகுதிகளுக்கு முதற்கட்டமாக சமாஜ்வாதி கட்சி  வேட்பாளர்களை அறிவித்து உள்ளது. கட்சியினர்  நிறுவனர் முலாயம் சிங் யாதவ் தற்போது அசாம்கார் ( Azamgarh) தொகுதி எம்.பி.யாக இருந்து வருகிறார். இவருக்கு மெயின்புரி தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது.  முலாயம் சிங் யாதவ்  ஏற்கனவே இந்த தொகுதியில் 3 முறை வெற்றி பெற்று எம்.பி.யாகி உள்ளார்.  கடந்த தேர்தலின்போது 3.64 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

அவருடன் சேர்ந்து மேலும் 5 பேர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

1) மெயின்புரி தொகுதி – முலாயம் சிங் யாதவ்

2) பாதான் தொகுதி – தர்மேந்திரா யாதவ்

3) பிர்ஷோபாத் தொகுதி – அக்ஷே யாதவ்

4) இட்டவா தொகுதி – கமலேஷ் கதேரியா

5) ராபர்ட்ஸ்கானி தொகுதி – பைலால் ஹோல்

6) பஹ்ரையா தொகுதி – ஷாபிர் வால்மிகி 

மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவோர் குறித்து 15 பேர் கொண்ட  முதல் பட்டியலை காங்கிரஸ் கட்சி நேற்று  வெளியிட்ட அறிவித்த நிலையில் சமாஜ்வாதி கட்சி இன்று 6 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டு உள்ளது.