லக்னோ
சொத்துக் குவிப்பு வழக்கில் சமாஜ்வாடி முன்னாள் எம் எல் ஏ அப்துல்லா அசம் கானுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

அப்துல்லா அசம் கான் சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவரும், உத்தரபிரதேச மாநில முன்னாள் அமைச்சருமான அசம் கானின் மகன் மற்றும் சுவார் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆவார் அப்துல்லா அசம் கான் மீது 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவற்றில் சட்டவிரோதமாக சொத்து வாங்கியது தொடர்பான வழக்கும் ஒன்றாகும்
இந்த வழக்கில், அப்துல்லா அசம் கான் கடந்த 2023-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீன் கோரி அப்துல்லா அசம் கான் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.
இந்த வழக்கில் அப்துல்லா அசம் கானுக்கு ஜாமீன் வழங்கி அண்மையில் உத்தரவிட்ட போதிலும் ஜாமீன் சரிபார்ப்பு தொடர்பான நடைமுறை சிக்கல்கள் காரணமாக அவரது விடுதலை தாமதமாகி வந்தது.
நேற்று முன்தினம் அப்துல்லா அசம் கானை ஜாமீனில் விடுவிப்பதற்கான நீதிமன்ற உத்தரவு அவர் அடைக்கப்பட்டுள்ள ஹர்டோய் சிறைக்கு அனுப்பப்பட்டு 17 மாதங்களுக்கு பிறகு நேற்று அவர் சிறையில் விடுவிக்கப்பட்டுள்ளார்