ஸ்ரீஹரிகோட்டா
இந்தியா அனுப்ப உள்ள சந்திராயன் 2 விண்கலம் குறித்த சில தகவல்கள் இதோ
சந்திரனுக்கு செல்ல உள்ள இந்தியாவின் சந்திராயன் 2 விண்கலம் வரும் ஜூலை மாதம் 9-16 தேதிகளில் வானில் செலுத்தப்பட உள்ளது. இந்த விண்கலம் இரு மாதங்களுக்கு பிறகு அதாவது செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி நிலவில் இறங்கும். இந்த விணகலத்தை நிலவுக்கு செலுத்த ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகளை இஸ்ரோ மும்முரமாக தயார் செய்து வருகிறது.
இந்த விண்கலம் குறித்த சில தகவல்கள் இதோ
· * சந்திராயன் 2 என்னும் 3.8 டன் எடையுள்ள இந்த விண்கலம் ஆர்பிடர், லாண்டர் மற்றும் ரோவர் என மூன்று பகுதிகளை கொண்டதாகும்.
· * ஆர்பிடர் மற்றும் லாண்டர் ஆகிய இருபகுதிகளும் இணைக்கப்பட்டு ஜிஎஸ் எல் வி ராக்கெட்டில் பொருத்தப்படும், ரோவர் என்னும் பகுதி லாண்டருக்குள் பொருத்தப்படும்
· * விண்ணில் செலுத்தப்பட்ட பிறகு ஜிஎஸ்எல்வி தனக்குள் இருக்கும் விண்கலத்தை தனியே பிரித்து விண்ணில் செலுத்தும். இதில் ஆர்பிடர் ஒர் எஞ்சின் போல செயல்பட்டு விண்கலத்தை சந்திரனுக்கு எடுத்துச் செல்லும். அதன் பிறகு ஆர்பிடரில் இருந்து பிரியும் லாண்டர் நிலவில் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட நிலவின் தெற்கு துருவத்துக்கு அருகில் தரை இறங்கும். ரோவர் அந்த நிலவின் நிலப்பரப்பில் விஞ்ஞான சோதனைகளை செய்யும்
· * லாண்டர் மற்றும் ஆர்பிடரிலும் விஞ்ஞான சோதனைக்கான உபகரணங்கள் பொறுத்தப்படும்.
· * ஆர்பிடர் நிலவுக்கு மேலே 100 கிமீ யரத்டில் நிலவை சுற்றி வரும். இம்முறை நிலவில் யாரும் செல்லாத நிலவின் தெற்கு துருவத்தில் இறங்கி சோதனை நடத்த உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
· * இந்த விண்கலத்தில் 13 தறவுகள் உள்ளன. அவை ஆர்பிடரில் 8, லாண்டரில் 3 மற்றும் ரோவரில் 2 என அமைக்கப்பட்டிருக்கும். இந்த தரவுகள் விஞ்ஞான உபகரணங்களை கொண்டதாகும்.
· * இந்த விண்கலம் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் ஒரு கருவியை எடுத்துச் செல்ல உள்ளது. இதற்காக கட்டணம் ஏதும் பெறவில்லை எனவும் இது நட்பு நோக்கத்தில் எடுத்துச் செல்லப்படுவதாகவும் சிவன் தெரிவித்துள்ளார்.
· * நாசா அனுப்பும் இந்த கருவி லேசர் கதிர்கள் மூலம் இயங்கும் ஒரு கண்ணாடியை கொண்டு இருக்கும். இதைக் கொண்டு அமெரிக்க விஞ்ஞானிகள் பூமிக்கும் இந்த லாண்டர் இருக்கும் இடத்துக்கும் உள்ள தூரத்தை பூமியில் இருந்தே துல்லியமாக அளக்க முடியும்.