சென்னை:

கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில், தமிழகத்திலேயே சேலத்தில் அதிகபட்ச வெயில் பதிவாகி இருப்பதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது. சேலத்தில் அதிகமாக பட்சமாக 90 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது.

பொதுவாக அக்னி நட்சத்திரத்தின்போதுதான் இதுபோன்ற அதிகமான வெப்பம் காணப்படும். ஆனால், இந்த ஆண்டு கோடை காலத்தின் தொடக்கத்திலேயே உச்சபட்ச வெயில் வாட்டி வருகிறது.

நேற்று தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. சென்னை, திருத்தணி, தருமபுரி பகுதியில் 38 டிகிரி வெயிலும், கோவையில் 37.2 டிகிரி செல்சியசும், சேலத்தில் அதிக பட்சமாக 39 டிகிரி செல்சியஸ் வெயிலும் பதிவாகி உள்ளது.

பகல் முழுவதும் வெப்பக்காற்று வீசி வருவதால் மக்கள் கடுமையான புழுக்கத்தால் அவதிப்பட்டு வருகின்றனர்.