சென்னை

நேற்று இரவு சேலம் பத்திரப்பதிவு டி ஐ ஜி ரவீந்திரநாத் கைது செய்யபட்டுள்ளார்.

தற்போது சேலம் பத்திரப்பதிவு டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வரும் ரவீந்திரநாத். கடந்த 2021-ம் ஆண்டு இவர், தென்சென்னை பத்திரப்பதிவு டி.ஐ.ஜி.யாக பணியாற்றியபோது தாம்பரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு சொத்தை போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாக பதிவு செய்வதற்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.

சென்னை உயர்நிதிமன்றத்தில் இது குறித்து ஆதாரங்களுடன் பாதிக்கப்பட்டவர்கள் வழக்கு தொடர்ந்தனர். உயர்நீதிமன்றம் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதன்படி, சி.பி.சி.ஐ.டி. காவல்துறையின்அர் விசாரணை மேற்கொண்டனர்.

சம்மந்தப்பட்ட வில்லங்க சான்றிதழை ரவீந்துரநாத்  8 முறை மாற்றியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதாவது விசாரணையில் ரவீந்திரநாத் மீதான குற்றச்சாட்டு உண்மை என்பது தெரியவந்தது.

எனவே அவர் மீது பல்வேறு குற்றப்பிரிவுகளின் கீழ் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் வழக்குப்பதிவு செதுஅவரை கைது செய்வதற்காக லம் சென்றனர். காவல்துறையினர் சேலத்தில் தனது வீட்டில் இருந்த ரவீந்திரநாத்தை அங்கிருந்து வேனில் சென்னைக்கு அழைத்து வந்தனர்.

நேற்று இரவு சென்னை எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் டி.எஸ்.பி. புருஷோத்தமன் விசாரணை மேற்கொண்ட பின்பு ரவீந்திரநாத் கைது செய்யப்பட்டார். காவல்துறையினர் அவரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.