சேலம்:

சேலம் அருகே ஓடும் ரயிலில் பெண்களிடம் நகை பறிப்பு சம்பவம்  நடைபெற்ற நிகழ்வு தொடர்பாக  சந்தேகிக்கப் படும் 4 பேரின் புகைப்படத்தை ரயில்வே காவல்துறையினர் வெளியிட்டு உள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சேலம் அருகே ஓடும் ரயிலில் கொள்ளை நடைபெற்றது.  அன்றைய தினம் தொடர்ந்து  4 ரயில்களிலும், மறுநாள் அதிகாலையில் 2 ரயில்களிலும்  பெண்களிடம் தங்க நகைகளை  ஒரு கும்பல்  கொள்ளையடித்து தப்பிச் சென்றது. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கொள்ளை யில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 4 பேரின் புகைப்படம் வெளியிடப்பட்டு உள்ளது.

ரயில் வழிப்பறி கொள்ளையர்கள்- பாலாஜி ஷிண்டே, அவினேஷ், அமோல், ராமதாஸ்

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே மாவலிப்பாளையம் என்ற ஊர் அருகே  ரயில்வே பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அந்த வழியே இயக்கப்படும் ரயில்கள் வேகம் குறைத்து மெவாக இயக்கப்பட்டு வருகின்றன. இதை நோட்டம் பார்த்திருந்த கொள்ளைக்கும்பல் கடந்த ஞாயிறு மற்றும் திங்கள் அன்று அதிகாலை அந்த வழியாக வந்த ரயிலின் பெட்டியில் ஏறி, அங்கு தூக்கிக்கொண்டிருந்த பெண்களை எழுப்பி அவர்களிடம் இருந்த தங்க நகைகளை கொள்டியத்துச் சென்றது.

இதுபெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், சம்பவ இடத்தை பார்வையிட்ட தமிழக ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதையடுத்து 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ரயில்வே பணிகள் நடைபெற்று வரும் இடத்தில் 24 மணி நேரம் காவல்துறை பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.

கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர்,  மாவலிப்பாளையத்தை சுற்றியுள்ள இடங்களில் வசிக்கும் வடமாநிலத்தவர்கள் குறித்து விபரங்களை சேகரித்து  விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், கொள்ளையில் ஈடுபட்டது வடமாநிலக் கும்பல் என தெரிய வந்திருப்பதாகவும், ஏற்கனவே வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டவர்களான  பாலாஜி ஷிண்டே, அவினேஷ், அமோல், ராமதாஸ்  ஆகியோர் தற்போது தலைமறைவான நிலையில், அவர்கள் 4 பேரின் புகைப்படங்களை போலீசார் வெளியிட்டு அவர்களைத் தேடி வருகின்றனர்.

புகைப்படமாக வெளியிடப்பட்டுள்ள  4 கொள்ளையர்கள் பிடிபட்டால் சேலம் ரயில் வழிப்பறி சம்பவம் தொடர்பா மேலும் தகவல்கள் கிடைக்கலாம்  போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.