தமிகத்தின் அதிவெப்பமான மாவட்டங்களில் ஒன்றான சேலத்தில், ஒரு தன்னார்வலர் அமைப்பினர் சாலையெங்கும் வாசகங்களை எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
“வெப்பம் இங்கே…. நிழல் எங்கே?…. சேலமே குரல் கொடு..” எனும் வாசகம் பல்வேறு அரசு , வனத்துறை, காவல்துறை கமிஷனர், நெடுஞ்சாலை மற்றும் நகராட்சி அலுவலகங்களின் முன் உள்ள சாலைகளில்  எழுதப் பட்டுள்ளன.
இது அரசை கேள்வி கேட்பது போல் வைக்கப்பட்டு இருந்தாலும், மக்களின் பொறுப்பினையும் கேள்விக்கு உட்படுத்தி உள்ளது.
veppam 1
நீதிமன்ற ஆணைப்படி, உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக மரங்கள் வெட்டப் படும்போது, அதற்கு  இணையான மரக்கன்றுகளை நட அரசும், நெடுஞ்சாலைத்துறையும் முன்வருவதில்லை.
சுற்றுச்சூழல் மற்றும் மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்து வரும் சேலம் மக்கள் மன்றத்தின் தலைவர் பியுஷ் மனுஷ் கூறுகையில், மரங்கள், தண்ணீரை உறிஞ்சி , வெள்ள பாதிப்பைத்தடுக்கும் கருவியாய் செயல் பட்டு வந்தன, மரங்களை வெட்டிவிட்டால், தண்ணீர் பள்ளமான இடங்களை நோக்கிப் பாய்ந்து சேதங்களை எற்படுத்துகின்றன. மக்கள் வீடு கட்டும் போது, மரம் நட இடம் விடுவதில்லை. ஒரு பரம் நடுவது நான்கு குளிர்சாதனப் பெட்டிகளுக்கு சமம் என்பதை மக்கள் உணர்வதில்லை.  நெடுஞ்சாலைத்துறையும், ஒரு மரம் வெட்ட வேண்டிய இடத்தில் பத்து மரங்களை வெட்டுகின்றனர்.” என்றார்.

PIYUSH MANUSH
சமூக ஆர்வலர், இயற்கை விவசாயி, பியுஷ் மனுஷ்

இவரது பயிற்சி பள்ளி, மே 18 மற்றும் 19 தேதி,  இயற்கை குறித்த பயிலரங்கம் ஒன்றை நடத்த உள்ளது.  நித்யானந்த் ஜெயராமன் மற்றும் ஆனந்த சயனன்  பயிற்சி அளிக்க உள்ளனர். 25 நபர்கள் கலந்துக்கொள்ளலாம். இதில் கலந்துக் கொள்ள பியுஷ் மனுஷ் -ன் அலைபேசி எண் 944-324-85-82-ல்  தொடர்பு கொள்ளலாம்.
சேலம் வெப்பநிலை என்ன?