ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்தியர்

Must read

டோக்கியோ:
டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் 200 மீட்டர் ( butterfly) பிரிவில் பங்குபெற இந்திய நீச்சல் வீரர் சஜன் பிரகாஷ் தேர்வானார்.


நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும், ஒலிம்பிக் போட்டி கடந்த 2020ம் ஆண்டு நடைபெறுவதற்காக திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமானக ஒலிம்பிக் போட்டித் தொடர் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் பெரும்பாலான நாடுகளில் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துள்ளதால், தடுப்பூசி எடுத்துக்கொண்ட வீரர்கள் மட்டும் ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறலாம் என்ற அறிவிப்போடு இந்த ஆண்டு ஜூலை மாதம் 23ம் தேதி முதல் ஆகஸ்ட் ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று இத்தாலி நாட்டின் ரோம் நகரில் நடைபெற்ற Sette Colli Trophy எனப்படும் நீச்சல் போட்டியில் 1:56.38 நிமிடத்தில் 200 மீட்டர் பந்தய தூரத்தை அடைந்தது மூலம் ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வானார் இந்திய வீரர் சஜன் பிரகாஷ். இதன் மூலம் இந்தியாவில் இருந்து நீச்சல் பிரிவில் ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வான முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார்.

தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட, கின்னஸ் சாதனை படைத்த நீச்சல் வீரர் குற்றாலீஸ்வரன் போதுமான பொருளாதார வசதி இல்லாததால் சர்வதேச போட்டிகளிலும், ஒலிம்பிக் போட்டியிலும் கலந்துகொள்ள முடியாமல் நீச்சல் அடிப்பதையே கைவிட்டார் என்பது இந்திய நீச்சல் போட்டி வரலாற்றில் ஒரு சோகமான முடிவாகும்.

More articles

Latest article