saithan
ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் விஜய் ஆண்டனி. மேட்ரிமோனியல் வரம் பார்த்து அருந்ததி நாயரை மணக்கிறார். இனிப்பாக தொடங்கும் இவர்களின் வாழ்க்கையில் திடுக்கிடும் சம்பவங்கள் நடைபெறுகிறது. இச்சம்பவத்தால் நெருங்கிய நண்பனையும் இழக்கிறார் விஜய் ஆண்டனி.
அமானுஷ்ய குரலால தன்னிலை மறந்து நாயகி அருந்ததி நாயரை கொலை செய்ய முயற்சி செய்கிறார். விஜய் ஆண்டனிக்கு என்ன ஆச்சு? இவரை பின் தொடரும் அந்த அமானுஷ்ய குரல் யார்? ஜெயலட்சுமி யார்? என திகிலான கேள்விகள்தான் இந்த சைத்தான்.
படத்திற்கு படம் வித்தியாசம் காட்டிக் கொண்டிருக்கிறார் விஜய் ஆண்டனி. நடிப்பில் எந்தவித அலட்டலும் இல்லாமல் கேஷுவலாக ஒவ்வொரு காட்சியிலும் அவரின் அசால்ட் மூவ்மெண்டால் கவர்ந்துவிடுகிறார்.
அருந்ததி நாயரை பார்ப்பதற்கு கொஞ்சம் உப்பி போன பூசணிக்காயை உருட்டிட்டு வந்து கேமிரா முன் நிக்க வச்சமாதிரி இருக்காரு. ஒருபக்கம் பார்த்தால் லட்சுமி மேனன் என பார்வையாளர்கள் கிசுகிசுப்பது நன்றாகவே கேட்கிறது. நடிப்பில் நாட் பேட்.
அறிவியல் கலந்த அமானுஷ்ய கதையை எழுதிய சுஜாதா, பிரதீப் கிருஷ்ணமூர்த்தி, ஜாய் டி க்ரூஸ் ஆகியோரை பாராட்டியாக வேண்டும்.
சைத்தானில் பாடல்களுக்கு முக்கியத்துவம் இல்லையென்றாலும் பின்னணி இசை படத்தின் லெவலை ஒருபடி மேலே கொண்டு சென்றுவிடுகிறது. முக்கியமாக ஜெயலட்சுமி என வரும் பின்னணி இசை மனதில் ஒரு இனம் புரியாத பயத்தை உண்டாக்கிவிடுகிறது.
அறிமுக இயக்குனரான பிரதீப் கிருஷ்ணமூர்த்தியின் திரைக்கதையில் கொஞ்சம் தடுமாற்றம் தெரிந்தாலும் அது படத்திற்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றுதான் தோன்றுகிறது.
மொத்தத்தில் சைத்தான் பயமுறுத்த தவறிட்டான்…!