புதுடெல்லி: ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், நட்சத்திர வீராங்கனைகளான சாய்னா நேவால் மற்றும் சிந்து ஆகியோர் இடம்பெறாத, இந்தியப் பெண்கள் அணியே களமிறங்கவுள்ளது.

சாய்னா மற்றும் சிந்து இருவரும், டோக்கியோ ஒலிம்பிக்கில் கவனம் செலுத்திவருவதால், அவர்கள் ஆசிய சாம்பியன்ஷிப்பில் கவனம் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

இத்தொடரில், இந்தியா, சீனா, தென்கொரியா, கஜகஸ்தான் மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகள் பங்கேற்கின்றன. பெண்கள் பிரிவில் நடைபெறும் தனக்கான முதல் போட்டியில், இந்திய மகளிர் அணி, கஜகஸ்தானை எதிர்கொள்கிறது.

இந்திய பெண்கள் அணியில், காஷ்யப், காயத்ரி மற்றும் அஷ்மிதா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய ஆண்கள் அணியைப் பொறுத்தவரை, இந்தோனேஷியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ள பிரிவில் இந்தியா சேர்க்கப்பட்டுள்ளது.