கிளாஸ்கோ
உலக பேட்மிண்டன் சாம்பியன் போட்டியில் இந்தியாவின் செய்னா நெஹ்வாலும் அரை இறுதிக்கு முன்னேறியுள்ளார்.
நேற்று நடந்த போட்டி ஒன்றில் இந்தியாவின் சிந்து அரை இறுதிக்கு முன்னேறியது தெரிந்ததே. இன்று மற்றொரு கால் இறுதிப் போட்டியில் இந்தியாவின் செய்னா நெஹ்வால் ஸ்காட்லாந்தின் வீராங்கனை கிறிஸ்டியுடன் மோதினார். இந்தப் போட்டி சுமார் ஒன்றே கால் மணி நேரம் விறுவிறுப்பாக நடந்தது.
போட்டி முடிவில் செய்னா 21-19, 18-21, 21-15 என்ற செட் கணக்கில் கிறிஸ்டியை வென்றார். செய்னாவும் அரை இறுதிக்கு முன்னேறிய வகையில் இந்தியாவுக்கு தற்போது இரு வெண்கலப் பதக்கங்கள் உறுதியாகி விட்டது.