வாஷிங்டன்:
அமெரிக்காவில் 227 கோடி ரூபாய் செலவில் சாய் பாலாஜி கோவில் கட்டப்படுகிறது.

அமெரிக்காவின் நியூஜெர்ஸி மாகாணத்தில் உள்ள மோன்ரோ என்ற இடத்தில், 12 ஏக்கர் பரப்பளவில், சாய் பாலாஜி கோவில் கட்ட 2016ல் அடிக்கல் நாட்டப்பட்டது.
227 கோடி ரூபாய் செலவில் கட்டப்படவிருக்கும் இந்த கோவிலின் முதற்கட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன.
இந்தக் கோவிலில், 30 அடியில் ஹனுமன் சிலை, தியான மண்டபம், மடப்பள்ளி, அன்னதான கூடம் உள்ளிட்டவை இடம் பெற உள்ளன.
ஜூன் மாதத்தில் சிலைகளை பிரதிஷ்டை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel