டெல்லி: தமிழ் மொழிக்கான 2022ம் ஆண்டு சாகித்ய அகாடமி பால் சாகித்யா புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி,  தமிழ் மொழிக்கான 2022ம் ஆண்டு சாகித்ய அகாடமி பால் சாகித்யா புரஸ்கார் விருது ‘மல்லிகாவின் வீடு’ என்ற சிறுகதைக்காக எழுத்தாளர் ஜி.மீனாட்சிக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.  2022ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி யுவ புரஸ்கார விருது, ‘தனித்திருக்கும் அரளிகளின் மதியம்’ என்ற கவிதை தொகுப்புக்காக, காளிமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.

குழந்தைகள் இலக்கியத்திற்கான 2022 ஆம் ஆண்டின் பால புரஸ்கார் சாகித்ய விருது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் குழந்தைகள் எழுத்தாளர் ஜி.மீனாட்சியின் ‘மல்லிகாவின் வீடு’ எனும் சிறுகதை தொகுப்பு தேர்வாகியுள்ளது.

ஜி.மீனாட்சி பத்திரிகைத் துறையில் 27 ஆண்டு கால அனுபவம் உள்ளவர். `தினமணி’, `புதிய தலைமுறை’ போன்ற பத்திரிகைகளில் பணியாற்றியவர். கல்கி குழுமத்திலிருந்து வெளிவரும் `மங்கையர் மலர்’ பத்திரிகையின் பொறுப்பாசிரியராக உள்ளார். பஞ்சாயத்து அமைப்புகளில் பெண் தலைவிகளின் பங்களிப்புப் பற்றி எழுதிய தொடர் கட்டுரைகளுக்காக தில்லியில் உள்ள `தி ஹங்கர் புராஜெக்ட்’ அமைப்பு வழங்கிய `சரோஜினி நாயுடு’ விருதையும் ஈரோடு அரிமா மு.ஜீவானந்தம் இலக்கிய விருதும், கவிதை உறவு இலக்கிய விருது, லயன்ஸ் கிளப் ஆஃப் சென்னை ஸ்ருதி வழங்கிய சாதனைப் பெண்மணி விருது, இலக்கிய வீதி அமைப்பின் அன்னம் விருது, மிகச் சிறந்த பத்திரிகையாளருக்கான நாரதர் விருது, மகாத்மா காந்தி நூலக விருது போன்ற பல விருதுகளைப் பெற்றவர்.

விருதுக்கு தேர்வான எழுத்தாளர்களுக்கு கேடயமும் ரூ.50,000 தொகையும் வழங்கப்படும். விருது வழங்கும் நிகழ்வுடல்லியில் வருகிற நவம்பர் 14 ஆம் தேதி நடைபெற உள்ளது.

அதுபோல 2022ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி யுவ புரஸ்கார விருது, ‘தனித்திருக்கும் அரளிகளின் மதியம்’ என்ற கவிதை தொகுப்புக்காக, காளிமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.