
சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல தமிழறிஞர் ம.லெனின் தங்கப்பா இன்று அதிகாலை புதுச்சேரியில் காலமானார். அவருக்கு வயது 84. முதுமையின் காரணமாக உடல்நலமின்றி சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை 1.30 மணி அளவில் இயற்கை எய்தினர்.
இரண்டுமுறை சாகித்ய அகாதெமி விருது பெற்ற படைப்பாளியாகவும் மிகச் சிறந்த மொழிபெயர்ப்பாளராகவும், தெளிதமிழ் என்ற இலக்கிய இதழின் ஆசிரியராகவும், 50 மேற்பட்ட அரிய நூல்களின் ஆசிரியராகவும், பல்வேறு தமிழ்நலம் சார்ந்த போராட் டங்களைத் தலைமை தாங்கி நடத்திய செயல்மறவராகவும், வாழ்வியல் பேரறிஞராகவும் விளங்கியவர் லெனின் தங்கப்பா.
1943ம் ஆண்டு நெல்லை மாவட்டம்,தென்காசி வட்டம், குறும்பலாப்பேரி என்ற கிராமத்தில் பிறந்த தங்கப்பா, தந்தையாரின் இளமைக்கால கல்வியின் பயனாக இயற்கையாகவே தமிழ்ப்புலமை பெற்றவர். இளங்கலைப் பொருளியல் பயின்ற அவர், பின்னர் முதுகலைத் தமிழ் இலக்கியம் பயின்றார்.
சிறந்த மொழிப்பெயர்பாளரான தங்கப்பா, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பள்ளிகளும், பிறகு புதுச்சேரி அரசுக்கு உரிமையான கல்லூரிகளில் புதுச்சேரி, காரைக்காலில் பணிபுரிந்தார். தமிழ் இன முன்னேற்றத்திற்கானஅமைப்புகளுடன் இணைந்து பணிபுரிந்த பெருமைக்கு உரியவர். பாவேந்தர், பெருஞ்சித்திரனார், கண்ணதாசன், கோவேந்தன் உள்ளிட்ட தமிழ்ப்பற்றாளர்களுடன் தொடர்புகொண்டிருந்தவர். பாவேந்தரின் குயில் இதழில் ம.இலெனின் என்னும் பெயரில் எழுதத் தொடங்கியவர். அதன் பிறகே லெனின் தங்கப்பா என்று அழைக்கப்பட்டார்.
துச்சேரி தமிழ்வளர்ச்சி நடவடிக்கைக்குழுவின் தலைவராகவும், புதுச்சேரி இயற்கைக் கழகத்தின் தலைவராகவும், புதுவை அரசின் மொழிபெயர்ப்புக் குழுவின் உறுப்பினராகவும், டில்லி சாகித்திய அகாதெமியின் மொழிபெயர்ப்பாளருள் ஒருவராகவும் இருந்தவர் தங்கப்பா.
[youtube-feed feed=1]