மும்பை

சென்னை தாஜ் கோரமண்டல் ஓட்டல் ஊழியரைச் சந்திக்கத் தாம் விரும்புவதாக சச்சின் டெண்டுல்கர் டிவிட்டரில் தமிழில் பதிவிட்டுள்ளார்.

அகில உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ரசிகர்களின் பேராதரவைப் பெற்றவர் ஆவார்.  அவருக்கு உலகெங்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.  அவர் சென்னை தாஜ் கோரமாண்டல் ஓட்டலில் தங்கி இருந்த போது அவருக்கு கைப்பட்டை வடிவை மாற்ற ஒரு ஊழியர் உதவி உள்ளார்.

தற்போது அவரைச் சந்திக்க விரும்புவதாக சச்சின் டெண்டுல்கர் தனது டிவிட்டரில் தமிழில் பதிவு இட்டுள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் தனது பதிவில், “எதிர்பாராத சந்திப்புகள் சில சமயம் மறக்க முடியாத தருணங்களாக மாறுகின்றன

சென்னை டெஸ்ட் தொடரின் போது Taj Coromandel ஊழியர் ஒருவர் என்னுடைய Elbow Guard பற்றி கூறிய ஆலோசனைக்குபின் அதன் வடிவத்தை மாற்றினேன்

அவரை சந்திக்க ஆசைப்படுகிறேன்,கண்டுபிடிக்க எனக்கு நீங்கள் அனைவரும் உதவ வேண்டும்” எனப் பதிந்துள்ளார்

இந்தப் பதிவை அவருடைய ரசிகர்கள் பலர் மறு பதிவு இட்டுள்ளனர்.