இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் முழு உருவச் சிலை வைக்கப்பட்டுள்ளது.

1973 ம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி மும்பையில் பிறந்த டெண்டுல்கர் தனது 50 வது பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடி மகிழ்ந்தார்.

1989 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்று விளையாடி ஏராளமான சாதனைகளை படைத்துள்ளார்.

200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய சச்சின் 15,921 ரன்களும், 463 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 18,426 ரன்களும் எடுத்துள்ளார்.

https://twitter.com/StumpOutsider/status/1719700839231815967

2013ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்றார்.

இவரை கௌரவிக்கும் விதமாக மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் உள்ள சச்சின் கேலரிக்கு அருகில் 22 அடி உயரம் கொண்ட முழு உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இதனை மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இன்று திறந்துவைத்தார் இந்த சிலை திறப்பு நிகழ்ச்சியில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் மற்றும் பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.