ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அங்கு அசோக் கெலாட் தலைமையிலான மாநில காங்கிரஸ் அரசு தள்ளாடி வருகிறது. இந்த நிலையில், முதல்வருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட்டை, துணை முதலமைச்சர் மற்றும் கட்சி உறுப்பினர் பதவியில் அதிரடியாக நீக்கப்பட்டார்.
இதையடுத்து, முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில், சச்சின் பைலட்டை நீக்கி ராஜஸ்தான் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
ராஜஸ்தானில் காங்கிராஸ் அரசில் முதல்வருக்கும், துணைமுதல்வருக்கும் இடையே ஏற்பட்ட அதிகார மோதல் காரணமாக, சச்சின் பைலட் தனது ஆதரவு 30 எம்எல்ஏக்களுடன் போர்க்கொடி தூக்கி உள்ளனர். முதல்வர் பதவி கேட்டு அவர் அடம்பிடித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஜெய்ப்பூரில் உள்ள சொகுசு விடுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது .ஆனால் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள சச்சின் பைலட்டுக்கு அழைப்பு விடுத்தும், சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கவில்லை.
இதனால் இந்த கூட்டத்தில் சச்சின் பைலட்டுக்கு எதிராக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அவரை துணை முதலமைச்சர் மற்றும் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்தும் நீக்கம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் அவருடன் இருக்கும் விஸ்வேந்தர் சிங் மற்றும் ரமேஷ் மீனா ஆகியோரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.
இதுகுறித்து, ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் அம்மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா (Kalraj Mishra )-வை நேரில் சந்தித்து சச்சின் பைலட் ,விஸ்வேந்தர் சிங் மற்றும் ரமேஷ் மீனா நீக்கம் குறித்து தெரிவித்தார் .இதற்கு ஆளுநரும் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.