பரிமலை

கர விளக்கு மற்றும் மண்டல காலங்களில் சபரிமலை பிரசாதத்தைப் பக்தர்கள் தபால் மூலம் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மண்டலம் மற்றும் மகர விளக்கு காலங்களில் சபரிமலைக்குக் கட்டுப்பாடுகளுடன் பக்தர்களை அனுமதிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

கடும் கட்டுப்பாடு காரணமாகப் பல பக்தர்கள் சபரிமலைக்குச் செல்ல முடியாத நிலை உண்டாகி இருக்கிறது.

அத்தகைய பக்தர்களுக்காக தேவஸ்தானம் அற்றும் தபால் துறை இணைந்து ஒரு ஏற்பாட்டைச் செய்துள்ளது.

அதன்படி இந்தியாவில் உள்ள சபரிமலை பக்தர்கள் தங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள தபால் நிலையம் மூலமாகச் சபரிமலை பிரசாதத்தைப் பணம் செலுத்தி முன் பதிவு செய்யலாம்.

அவர்களுக்கு 2 அல்லது 3 தினங்களுக்குள் பிரசாத பாக்கெட் வீட்டுக்கு வந்து சேரும்.

இந்த பாக்கெட்டில் அரவணை, நெய், விபூதி, மஞ்சள் மற்றும் குங்குமம் ஆகிய பிரசாதங்கள் இருக்கும்.

இவை தபால் மூலம்  பார்சலாக அனுப்பப்பட உள்ளது.