பரிமலை

பரிமலை கோவிலில் மண்டலம் மற்றும் மகர விளக்கு காலத்தில் தினசரி 1000 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட உள்ளது.

சபரிமலை கோவில் தமிழ் மாதம் முதல் ஐந்து நாட்களும், மண்டலம் மற்றும் மகர விளக்கு காலங்களிலும் நடை திறக்கப்படுகிறது.

சபரிமலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாத பூஜைகளுக்குப் பக்தர்கள் வ்ர அனுமதி அளிக்கப்படுவதில்லை.

இந்நிலையில் வரும் நவம்பர் மாதம் மண்டல காலம் தொடங்குகிறது.

எனவே சபரிமலைக்கு பக்தர்களை அனுமதிப்பது தொடர்பான நிபுணர் குழு ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை ஒன்றை அளித்துள்ளது.

அந்த அறிக்கையின்படி  10 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட 1000 பக்தர்கள் மட்டும் மண்டலம், மகரவிளக்கு காலத்தில் அனுமதிக்க உள்ளதாக அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமைகளில் 2 ஆயிரம் வரை பக்தர்களை அனுமதிக்க உள்ளனர்.

மகர விளக்கு அன்று 5000 பக்தர்களுக்குத் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது.

இவ்வாறு தரிசனத்துக்கு வருவோர் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்திருக்க வேண்டும்.

மேலும் 40 மணி நேரத்துக்கு முன்பு பெற்ற கொரோனா பரிசோதனை சான்றிதழைக் கையில் கொண்டு வர வேண்டும்.