சபரிமலை
நாளை மாலை 5 மணிக்கு ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் 5 நாட்கள் புகைகளுக்காக நடை திறப்பது வழக்கமாகும். மண்டல பூஜை நேரத்தில் 48 நாட்கள் மற்றும் மகரவிளக்கு பூஜையின் 17 நாட்கள் நடை திறக்கப்படும்
அவ்வகையில் ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நாளை மாலை 5 மணிக்குத் திறக்கப்படுகிறது. நாளை மறுநாள் முதல் ஆனி மாத பூஜைகள் நடைபெற உள்ளன. 19 ஆம் தேதி நடை அடைக்கப்படுகிறது.
தற்போது கொரோனா பரவல் நாடெங்கும் அதிகரித்துள்ளது. அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரள மாநிலம் மூன்றாம் இடத்தில் உள்ளது. எனவே பக்தர்களுக்கு சபரிமலையில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]