டெல்லி:

பரிமலை தொடர்பான வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதி மன்ற அரசியல் சாசன அமர்வு, விசாரணையை அடுத்து, அடுத்தக்கட்ட வழக்கின் விசாரணையை 3 வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளது.

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லாலாம் என  கடந்த 2018ம் ஆண்டு உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் கடுமையான போராட் டங்கள் நடைபெற்றது. இந்த் நிலையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி, 60-க்கும் மேற்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை விசாரித்த முன்னாள் உச்சநீதிமன்ற  தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, இந்த மேல்முறையீட்டு வழக்கை 9 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 14-ந் தேதி உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து, தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை  நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான 9 நீதிபதி களை கொண்ட அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது. அதையடுத்து, இன்றுமுதல் விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது கருத்து தெரிவித்த  தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே,  இது வெறும் சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான விஷயம் கிடையாது . சபரிமலை கோவில் பிரச்சினையில் நவம்பர் 14 ம் தேதி 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு எழுப்பிய கேள்விகளை மட்டுமே விசாரிப்போம். எல்லா மதத்திலும் இருக்க கூடிய விஷயங்களையும் விசாரிக்க இருக்கிறோம்.

அதிலும் சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற 50 சீராய்வு மனுக்களை விசாரிக்கப் போவதில்லை.

கோவில், மசூதி போன்ற வழிபாட்டு தலங்களுக்குள் பெண்கள் நுழைவது வழிபாட்டு முறைகளுடன் சேர்ந்த விஷயமா என்பதை விசாரிக்க இருக்கிறோம்’ என தெரிவித்தார்

இந்த வழக்கில் விசாரிக்கப்பட வேண்டிய கேள்விகள் குறித்து அனைத்து தரப்பும் பதில் அளிக்க 3 வாரங்கள் அவகாசம் அளிக்கப்பட்டது. பின்னர்  வழக்கை 3 வாரத்திற்கு சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வு ஒத்திவைத்தது.