சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயில் மண்டல பூஜை, மகர விளக்கு நடை திறப்பு விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயில் 2016-ஆம் ஆண்டுக்கான மண்டல பூஜை மகர விளக்கு முன்னிட்டு நவம்பர் 15-ம் தேதி மாலை 5.30 மணிக்கு நடை திறந்து டிசம்பர் 26-ம் தேதி இரவு நடை மூடப்படுகிறது.
ஸ்ரீ ஐயப்பனுக்கு 2016-ம் ஆண்டு நவம்பர் 16-ம் தேதி முதல் டிசம்பர் 26-ம் தேதி வரை தினந்தோறும் காலை நெய் அபிஷேகம் நடைபெறும்.
மகர விளக்கு பூஜையை முன்னிட்டு டிசம்பர் 30-ம் தேதி மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு ஜனவரி 20.1.2017 காலை நடை மூடப்படும்.
இந்த ஆண்டு மண்டல மகர விளக்கு பூஜை நிறைவு பெறுகிறது. மண்டல மகர விளக்கு பூஜை நாட்களில் டிசம்பர் 31-ம் தேதி முதல் ஜனவரி 19.1.2017 வரை நெய் அபிஷேகம் நடைபெறும்.
2017ம் ஆண்டு மாத பூஜைக்காக பிப்ரவரி: 12-ம் தேதி மாலை நடை திறந்து 17-ம் தேதி இரவு நடை மூடப்படும்.
மார்ச்: 14-ம் தேதி மாலை நடை திறந்து 19-ம் தேதி இரவு நடை மூடப்படும்.
பங்குனி உத்திர பூஜை 31.3.2017 மாலை நடை திறந்து 9.4.2017 இரவு மூடப்படும்.
புதிய கொடி மரம் பணிகள் நடைபெற்று வருவதால் ஆண்டு உற்சவம் ஜூன் மாதம் மாற்றப்பட்டுள்ளது தேதி முடிவு செய்யப்படவில்லை.
விஷூ, மாத பூஜையை முன்னிட்டு 10.4.2017 மாலை நடை திறந்து 18.4.2017 இரவு மூடப்படும்.
மே: 14.5.2017 மாலை நடை திறந்து 19.5.2017 இரவு நடை மூடப்படும்.
பிரதிஷ்டை தினம்:
ஜூன் 3-ம் தேதி மாலை நடை திறந்து 4-ம் தேதி இரவு மூடப்படும். மாத பூஜைக்காக மீண்டும் 14-ம் தேதி மாலை நடை திறந்து 19-ம் தேதி இரவு நடை மூடப்படும்.
ஜூலை: 16.17.2017 மாலை நடை திறந்து 21.7.2017 இரவு நடை மூடப்படும்.
ஆகஸ்ட்: 16.8.2017 மாலை நடை திறந்து 21.8.2017 இரவு நடை மூடப்படும்.
திருவோணம் பூஜைக்காக செப்டம்பர் 2ம் தேதி மாலை நடை திறந்து 6-ம் தேதி நடை மூடப்படும்.
மாதப் பூஜைக்காக மீண்டும் 16-ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறந்து 21-ம் தேதி நடை மூடப்படும்.
அக்டோபர்: 16.10.2017 மாலை நடை திறந்து 21.10.2017 இரவு மூடப்படும்.
இந்த நாட்களுக்கு உள்ளேயே ஸ்ரீ சித்திரை ஆட்டத் திருநாள் வருவதால் தனியாக கோயில் நடை திறக்கப்படாது.
நவம்பர் மண்டல பூஜை 15.11.2017 மாலை நடை திறந்து டிசம்பர் 26.12.2017 நடை மூடப்படும்.
2018 மகர விளக்கு ஐனவரி 14-ஆம் தேதி வருவதாகவும் சபரிமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
மேலும் தகவல்களுக்கு 04735-202026 / 202038 எண்களில் தொடர்பு கொள்ளுமாறும், www.sabarimalaaccomodation.com தங்கும் வசதிக்கும், www.sabarimalaq.com பம்பையிலிருந்து சன்னிதானம் செல்ல முன் அனுமதி சீட்டு பெற (விருச்சுவல் க்யூ) பதிவு செய்ய இணைய தளத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு தேவஸம் போர்டு வலியுறுத்தியுள்ளது.