சென்னை

டிகர் விஜய் விசிக உடன் கூட்டணி வைப்பாரா என்பதற்கு அவரது தந்தை இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் பதிலளிக்க மறுத்துள்ளார்.

.

நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை அண்மையில் தொடங்கி கட்சியின் முதல் அரசியல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த மாதம் (அக்டோபர்) 27-ந்தேதி பிரமாண்டமாக நடந்தினார். மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் விஜய்யின் பரபரப்பான பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.  சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூல் வெளியீட்டு விழாவில் பேசிய தவெக தலைவர் விஜய் இறுமாப்புடன் 200 தொகுதிகளில் வெல்வோம் என்ற தி.மு.க.வின் கூட்டணி கணக்கை மக்களே ‘மைனஸ்’ ஆக்கிவிடுவார்கள் என்று பேசியது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம், “அரசியலில் விஜய் கண்டிப்பா ஜெயிப்பார். அவரின் அரசியல் நகர்வு நல்லா இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

விஜய் விசிகவுடன் கூட்டணி வைப்பாரா? அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் அவரின் பேச்சு குறித்து சொல்லுங்கள் என்று செய்தியாளர்கள் அடுத்தடுத்து கேள்விகளை எழுப்பினர். அவர் “நான் இங்கு வந்திருக்கும் நோக்கம் வேற.. என்னிடம் வேறு எது கேட்டாளும் பதிலளிக்க மாட்டேன் ’ எனக் கூறியுள்ளார்