துரை

துரை எம் பி சு வெங்கடேசன் நாடாளுமன்றத்தில் காந்தி.சிலை இடமாற்றம் குறித்தூ கண்டனம் தெரிவித்துள்ள்னர்

சமீபத்தில் நாடாளுமன்ற வளாகத்தின் வாசல் முன் இருந்த காந்தி சிலை உட்பட வெவ்வேறு இடங்களில் இருந்த தலைவர்களின் சிலைகள் புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் பின்னே உள்ள பூங்காவுக்கு மாற்றம் செய்யப்பட்டது. ஆளும் பாஜக வ்ன் இந்த செயலுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

அவர்களில் மதுரை எம் பி சு வெங்கடேசனும் ஒருவர் ஆவார், நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வெங்கடேசன் தனது அஞ்சலி செய்தியில் காந்தி சிலை இடமாற்றத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்

மதுரை எம்.பி சு.வெங்கடேசன் எக்ஸ் வலைதள பக்கத்தில்,

“நாடாளுமன்றத்தின் முன்புற வாசலின் முன்னே இருந்த உனது திருவுருவச் சிலை இப்பொழுது பின்புற வாசலுக்கும் பின்னே வைக்கப்பட்டுள்ளது. பாசிஸ்டுகள் அவைக்குள் வருகிற பொழுது உன் முகத்தில் முழிக்கக்கூடாதென நினைக்கிறார்கள். நீ அல்லவோ எம் தேசத்தின் தந்தை. வாழ்க நீ எம்மான். என்றென்றும் வணங்குகிறோம் உன்னை”

எனப் பதிவிட்டுள்ளார்.