சென்னை
நடிகை கஸ்தூரி தமிழகத்தில் பிராமணர்களுக்கு பாதுகாப்பில்லை எனக் கூறியதற்கு எஸ் வி சேகர் கண்டனம் தெரிவித்துள்ளார்,
சென்னையில் இந்து மக்கள் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்துகொண்டு பேசும்போது, தெலுங்கு மக்கள் தொடர்பாக தெரிவித்த கருத்துகள் சர்ச்சையானது. கஸ்தூரிக்கு பா.ஜ.கஉள்ளிட பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் வலுத்தததால் நடிகை கஸ்தூரி தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.
அதே கூட்டத்தில் தமிழகத்தில் பிராமணர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று நடிகை கஸ்தூரி கூறியுள்ளார். கஸ்தூரியின் இந்த பேச்சுக்கு பல பிராமணர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நடிகர் எஸ் வி சேகர் இது குறித்து செய்தியாளர்களிடம்,
“நடிகை கஸ்தூரியின் பேச்சு மிகவும் கண்டனத்திற்குரியது. தமிழகத்தில் பிராமணர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்வது தவறு. தமிழகத்தில் சுமார் 10 கோடி பேர் இருக்கிறார்கள். சில இடங்களில் குடும்ப உறுப்பினர்களே ஒருவரை ஒருவர் கொலை செய்கின்றனர். அதற்காக தமிழகம் முழுவதும் அவ்வாறு நடக்கிறது என்று கூற முடியுமா?
ஒரு இடத்தில் நடப்பதை பொதுப்படையாக்க முயற்சிக்க கூடாது. இனப்படுகொலை என்ற வார்த்தையை சில மாதங்களுக்கு முன்பு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசினார். எனவே, அதைப் பற்றி பேசினால் பா.ஜ.க.வில் அண்ணாமலை தனக்கு ஒரு வாய்ப்பு கொடுப்பார் என நினைத்து கஸ்தூரி பேசியுள்ளார். ஆனால் தமிழ்நாட்டில் பா.ஜ.க.வின் கதவு கஸ்தூரிக்கு மூடப்பட்டது. ஆந்திராவிலும் அவர் மீது வழக்கு தொடுத்துள்ளனர். இனி கஸ்தூரி தனியாக கட்சி ஆரம்பித்து என்ன வேண்டுமானாலும் பேசிக்கொள்ளலாம்.
என்று கூறி உள்ளார்.