தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கியுள்ள ஆர்.ஆர்.ஆர்.
2021 டிசம்பரில் வெளியாகும் இன்று கூறப்பட்ட நிலையில், பொங்கலுக்கு வெளியிட தேவையான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் கொரோனா காரணமாக தள்ளிப்போன ஆர்.ஆர்.ஆர். ரிலீஸ் இப்போது தெலுங்கில் வெளியாக இருக்கும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்த மெகா பட்ஜெட் படமான ஆச்சார்யா தயாரிப்பு நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒருவழியாக மார்ச் 25 ல் ரிலீஸ் என்று முடிவெடுத்திருக்கிறார்கள்.
இதே மார்ச் 25 தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டான் படமும் ரிலீசாக இருப்பது ஆர்.ஆர்.ஆர். பட குழுவுக்கு மேலும் ஒரு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் ஆர்.ஆர்.ஆர். ப்ரோமோ நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் தனது டான் படம் வெளியாகும் அதே நாளில் இந்த படமும் வெளியாகும் என்ற தகவலால் நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதாக கூறப்படுகிறது.
கொரோனா பரவல் காரணமாக திரைக்கு வராமல் தள்ளிப்போன பல படங்கள் தற்போது வரிசைகட்டி நிற்பதால் அனைத்து தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும்படியான வாய்ப்பிற்காக பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேச்சு நிலவுகிறது.