இந்தியாவுக்கு வருகை தருமாறு பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் வியாழக்கிழமை தெரிவித்தார்.
ரஷ்ய சர்வதேச விவகார கவுன்சிலால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘ரஷ்யா-இந்தியா: ஒரு புதிய இருதரப்பு நிகழ்ச்சி நிரலை நோக்கி’ என்ற மாநாட்டில் பேசிய லாவ்ரோவ், புடினின் இந்திய வருகைக்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகக் கூறினார்.
இருப்பினும், புடின் இந்தியாவுக்கு எப்போது வருவார் என்பது வெளியிடப்படவில்லை.
2024 ஜூலையில் ரஷ்யா சென்ற பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புடினை இந்தியா வருமாறு அழைத்தது குறிப்பிடத்தக்கது.