சுவிட்சர்லாந்து

ஜெனிவா சர்வதேச கார் கண்காட்சியில் ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட சொகுசுக் கார்கள் பலரையும் கவர்ந்துள்ளன.

இந்த மாதம் 7 ஆம் தேதியில் இருந்து சுவிட்சர்லாந்தில் ஜெனிவா சர்வதேச கார் கண்காட்சி நடந்து வருகிறது. இதில் உலகெங்கும் உள்ள பல கார் தயாரிப்பு நிறுவனங்களும் தங்களது படைப்புக்களை வைத்து மக்களை கவர்ந்து வருகின்றனர்.

ரஷ்யாவை சேர்ந்த அவுரஸ் கார் நிறுவனம் முதல் முறையாக தனது சொகுசுக் கார்களை மக்களின் பார்வைக்கு இந்த கண்காட்சியில் வைத்துள்ளன. இந்தக் கார்கள் பலருடைய கண்களையும் கருத்தையும் கவர்ந்துள்ளன.

இந்த நிறுவனத்தின் சொகுசுக் காரன அவுரஸ் செனட் லிமோசின் காரை ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதின் பயன்படுத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

இதோ நமது வாசகர்கள் பார்வைக்காக அவுரஸ் கார்கள் :

 

[youtube-feed feed=1]