ரஷ்யாவின் வெளியுறவு புலனாய்வு சேவையின் இயக்குனர் செர்ஜி நரிஷ்கின், செவ்வாயன்று அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பின் (CIA) இயக்குனர் ஜான் ராட்க்ளிஃப்புடன் தொலைபேசியில் பேசினார்.

இந்த விவகாரம் குறித்து செய்தி வெளியிட்ட ரஷ்ய செய்தி நிறுவனமான ‘இன்டர்ஃபாக்ஸ்’, இரு நாடுகளின் உளவுத்துறை நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு மற்றும் நெருக்கடி மேலாண்மை குறித்து விவாதங்கள் நடத்தப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான மூன்று ஆண்டுகால போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக உக்ரைனும் அமெரிக்காவும் செவ்வாய்க்கிழமை சவுதி அரேபியாவில் பேச்சுவார்த்தை நடத்தின.
அமெரிக்க முன்மொழிவுகளை உக்ரைன் ஏற்றுக்கொண்டு 30 நாள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டது. அதன்படி, உக்ரைனுக்கு இராணுவ உதவி மீதான தற்காலிகத் தடையை நீக்கி, உளவுத்துறை பகிர்வை மீட்டெடுப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
அதேபோல், அமெரிக்கா ரஷ்யாவிடம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை முன்மொழிய தயாராக உள்ளது.
இந்த முன்னேற்றங்களுக்கு மத்தியில், இரு நாடுகளின் உளவுத்துறை தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.